Tuesday, December 31, 2013


இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்
 இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.
SR. TOA தகுதித்தேர்வு 30/03/2014ல் நடைபெற உள்ளது. 
01/07/2013 அன்று 4 ஆண்டுகள் பணி முடித்த TOA தோழர்கள் பங்கு கொள்ளலாம். +2 கல்வித்தகுதி உள்ளவர்கள் நேரடியாக WALK IN GROUPல் நியமனம் பெறுவார்கள். 
+2 கல்வித்தகுதி இல்லாத தோழர்கள் தேர்வு எழுத வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 20/01/2014.

உத்தரவு நகல் காண இங்கே சொடுக்கவும்

Friday, December 27, 2013

கடலூரில்  நடைபெறவுள்ள ஒலிக்கதிர் பொன்விழா சிறப்பு மாநாட்டிற்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு அளித்து 
மிழ் மாநில நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது. 
உத்தரவு நகல் காண இங்கே சொடுக்கவும்.

Wednesday, December 25, 2013

26.12.2013
சுனாமி  9 ஆம் ஆண்டு நினைவு தினம் 
ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா
உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?

உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?
பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன் 
என்ற வைரமுத்துவின் கவிதையோடு 
 நினைவு அஞ்சலி செலுத்துவோம்.
 
வெண்மணி தியாகிகள் தினம் (1968 டிசம்பர் 25)
பலியான வெண்மணித் தியாகிகள்

1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)

 வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்! 


Sunday, December 22, 2013

  MOU with Union Bank of India 

நமது ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் கொடுப்பதற்கு காலவரையறை நீட்டித்து

 யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன்

 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது .

கடிதம் நகல் காண இங்கே சொடுக்கவும்Friday, December 20, 2013

பொது நிறுங்களுக்கான தேர்வு வாரியம் 19.12.13 நடத்திய நேர்கானலில் CMD , BSNL பதவிக்கு திரு.ANUPAM SHRIVASTAVA,DIR (CM),BSNLஅவர்கள் தேர்வு செய்யபட்டுள்ளார் என பொது நிறுங்களுக்கான தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இவரது பதவி காலம் ஜூலை 2014 முதல் தொடங்கும்.  

Tuesday, December 17, 2013

ஒலிக்கதிர் பொன்விழா (1963 - 2013 )

06-01-2014 அன்று   கடலூர் சுப்பராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று கடலூர் மாவட்ட சங்கம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுயுள்ளது.

Friday, December 13, 2013

DoT invites Application for 1800MHz and 900MHz Spectrum Auction Starting January 23

India’s Department of Telecom invites application for 2G spectrum auction starting January 23, 2013. The DoT has issued the NIA document (Notice of Inviting Application) to start in 1800MHz and 900MHz band spectrum auction.

According to the DoT, the award of Spectrum in 1800MHz and 900MHz band shall be conducted as a single process. A common Notice has been issued only for the sake of convenience.The last date for submission of applications by interested companies is January 4.
In each service area or telecom circle, bidders will bid for blocks of spectrum of 200 KHz Paired in 1800 MHZ and 1 MHz Paired in 900 MHZ Band (i.e. the right to use spectrum blocks not linked to any frequency) as per their respective permissible limit dependingupon their categorization as a “New Entrant” or as an “Existing Licensee”.

In the auction, since the maximum number of blocks a bidder can bid is restricted on the basis of the applicable bidding caps in a Service Area, it is not possible for a bidder to win more than the same in that Service Area.

Block size shall be of 200 KHz (Paired) in 1800 MHz Band and 1 MHz (Paired) in 900 MHz Band. Minmum number of blocks to be bid shall be 25 in 1800 MHZ band for new entrant while existing licensee shall bid for minimum of 3 blocks in 1800 MHz band. Each Bidder is required to bid a minimum of 5 Blocks in 900 MHz Band

Department of Telecom (DoT) will hold a pre-auction bid conference on December 20, 2013 and last date for companies / operators to seek clarifications on rules stated in ‘Notice Inviting Application’ is December 28, NIA said.

As per the NIA, DoT had sought 60 days time to start auction from the date cabinet (Govt of India) decides on the spectrum base price and the NIA was to be issued after 15 days of the decision. The DoT has, however, issued NIA within 3 days of Govt of India putting its stamp on minimum price for two sets of 2G spectrum – 1800 Mhz band and 900 Mhz.

According to NIA, there shall be a moratorium of 2 years for payment of balance amount of one time charges for the spectrum, which shall be recovered in 10 equal annual installments. Successful bidder/operator will have to pay first installment of the balance amount on the third anniversary of the first payment and subsequent installment will have to be on the same date of each following year.
According to DoT, there are no restrictions on the technology (2G, 3G or 4G) to be adopted for providing services within the scope of the service license using spectrum blocks allotted through this auction.
However the successful bidder needs to provide details of the technology proposed to be deployed for operation of its services using spectrum blocks allotted through this auction within one month of obtaining the licence, if the technology happens to be other than GSM/CDMA/WCDMA – 3G to DoT.

Courtesy : Telecom Talk

 

Monday, December 9, 2013

இரங்கல்

நமது குடந்தை மாவட்ட உதவி  செயலாளர் தோழர். R.புண்ணியமூர்த்தி, காரைக்கால்  அவர்களின் தாயார் நேற்று (08.12.13) இரவு   காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு கிளைச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் நாளை  (10.12.13) ஓடுதுறையில்   நடைபெறும் .


Friday, December 6, 2013

டிசம்பர் -6 அண்ணல் அம்பேத்கார்  நினைவு தினம்

Tuesday, December 3, 2013

மாவட்ட செயற்குழு 
குடந்தை மாவட்ட செயற்குழு வரும் 07.12.2013 அன்று காரைகால் மார்கெட் வீதியில் உள்ள M.A.G திருமண அரங்கத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து தோழர்கள்  மற்றும் தோழியர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.   
போனஸ் குழு கூட்டம்  

செயல்திறன் அடிப்படையில் புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட போனஸ் குழு 09.12.2013 திங்கள்கிழமையன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவு காண இங்கே சொடுக்கவும்

Monday, December 2, 2013

கைபேசி மூலம் மணியார்டர் சேவை தொடக்கம் 

காரைக்கால்: காரைக்கால் துணை தபால் நிலையத்தில் செல்போன் மூலம் மணியார்டர் அனுப்பும் சேவை நேற்று முன்தினம் முதல் துவங்கியது.

காரைக்கால் அம்மையார் கோயில் பின்புறம் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் முதல் செல்போன் மூலம் மணியார்டர்(எம்.எம்.டி.எஸ்) அனுப்பும் புதிய சேவை துவங்கியது. இதன் மூலம், பணம் அனுப்ப விரும்புவோர், தபால் நிலையத்திற்குச் சென்று யாருக்குப் பணம் அனுப்ப வேண்டுமோ அவரது செல்போன் எண், அவரது பெயரைக் கூறி பணத்தை வழங்கவேண்டும். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பயனாளிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பப் படும். அந்த எஸ்.எம்.எஸ்-ல் 6 இலக்க ரகசிய எண் குறிப்பிடப்படும்.

பின்னர், அந்தப் பயனாளி தனது ஊரில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று, தனது செல்போனுக்கு வந்த 6 இலக்க ரகசிய எண்ணைக் குறிப்பிட்டு, செல்போன் எஸ்.எம்.எஸ் செய்தியைக் காட்டவேண்டும். அடுத்த சில நிமிடங்களில் அவர் பணம் பெற்றுகொள்ளலாம். இந்தப் புதிய சேவை மூலம், ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் அனுப்ப முடியும். ரூ.1000 முதல் ரூ.1500 வரை பணம் அனுப்ப கமிஷன் ரூ45, 1501 முதல் ரூ.5 ஆயிரம் வரை ரூ.79 கமிஷனும், ரூ.5001 முதல் ரூ.10,000 வரை ரூ.112 கமிஷனும் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவை நாகை ,திருவாரூர் ,வேளாங்கண்ணி என 7 தபால் நிலையத்தில் உள்ளதாக காரைக்கால் துணை தபால் நிலைய அதிகாரி தெரிவித்தார் .