Tuesday, January 21, 2014


ஜனவரி - 21தோழர்.லெனின் நினைவு நாள்

 கொடுஞ்சுரண்டலுக்கு ஆட்பட்டு வறுமையிலும், அறியாமையிலும் உழண்டு கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்திற்கு கலங்கரை விளக்கமாக மார்க்சிய தத்துவத்தை வழங்கியவர் காரல் மார்க்ஸ் என்றால் அதை செயல்முறை ரீதியாக நடைமுறைப்படுத்தி காட்டியவர் தோழர்.லெனின் ஆவர். இளம் வயதிலையே அன்பு தந்தையை பறி கொடுத்து , மார்க்சியத்தை அறிமுகம் செய்து அறிவு கண்ணை திறந்த அண்ணன் அலெக்சாண்டரை ஜார் மன்னனின் கொடுங்கோன்மைக்கு பறி கொடுத்த போதும் மார்க்சியம் அவருக்கு வழிகாட்டியது. இதற்கிடையே வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றார் லெனின் .
மார்க்சியத்தை நன்கு கற்று தேர்ந்த லெனின் தொழிலாளர்களை சந்தித்தார்,அவர்களின் அவல நிலைக்கு காரணங்களை விளக்கினார், ரகசிய கூட்டங்களை நடத்தினார். இதனால் கோபம் கொண்ட ஜார் அரசாங்கம் லெனினை சைபிரீயவிற்கு நாடு கடத்தியது. சைபிரீயாவில் இருந்து விடுதலையானவுடன் ஜெர்மன் சென்று ‘இஸ்கரா’ என்ற பத்திரிக்கையை துவங்கினார். இந்த பத்திரிக்கையை நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் கொண்டு சென்றனர். ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினர். 1905 ஆண்டில் ஜார் அரசின் அடக்குமுறையை பொறுத்து கொள்ள முடியாத தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்களின் வறுமை நிலையை ஜார் மன்னனிடம் சொல்வதற்கு மகஜர் ஒன்றை தயாரித்து அதை கொடுப்பதற்கு ஊர்வலமாக சென்றனர். ஆனால் கொடுங்கோலன் ஜார் அந்த தொழிலாளர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். ஆனாலும் அந்த கிளர்ச்சியை ஜார் மன்னன் கொடூரமாக ஒடுக்கினான்.
ஆனாலும் மனம் தளராமல் லெனின் வலிமையான போல்ஸ்விக் கட்சியை உருவாக்கினார். 1914 இல் ரஷிய மன்னன் ஜார் நாடு பிடிக்கும் ஆசையில் முதல் உலக போரில் குதித்தான். இந்த கொள்ளைகார ஏகாதிபத்திய போரினால் உழைக்கும் மக்களுக்கு நன்மை எதுவும் இல்லை, தொழிலாளர்கள் தங்களை சுரண்டி கொளுத்து கொண்டிருக்கிற முதலாளிகளுக்கு எதிராக அவர்களுக்கு தலைமை தாங்க கூடிய அரசுக்கு எதிராக போரிட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். 1917ல் பிப்ரவரி புரட்சி வெடித்தது ஜார் வீழ்த்தப்பட்டான். இருந்த போதும் முதலாளிகள் ஆட்சியை கைப்பற்றி கொண்டனர். பாரளமன்றத்தை அமைத்து அதை சந்தை மடமாக நடத்தி கொண்டு இருந்தனர். மக்கள் அதே வறுமையோடு வாழ்ந்து கொண்டுருந்தனர்.
லெனின் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். நவம்பர் 7 ல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்க துவங்கினர். அரசு அலுவலங்கள் , காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றபட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியில் விழ்ந்தது . முதலாளிகள் ஊரை விட்டு ஓட்டமெடுத்தனர். முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது .ரசியா சோஷலிச நாடு என்று அறிவிக்கப்பட்டது, லெனின் அந்த நாட்டின் மாபெரும் தலைவரானார்.
சோஷலிச ரசியாவை பல நாடுகளும் ஓன்று சேர்ந்து நசுக்க வேண்டும் என்று படையெடுத்து வந்தன. அவை அனைத்தும் லெனினால் தலைமை தாங்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் செம்படையால் தோற்கடிக்கப்பட்டது. ஜார் மன்னனால் பிடித்து வைக்கப்படிருந்த நாடுகளை விடுதலை செய்தார் லெனின். ஆனால் அந்த நாடுகள் சுரண்டலற்ற சோவியத் கூட்டமைப்பில் அங்கமாக விருப்பம் தெரிவித்த்தன. அங்கும் செங்கொடி பறந்தது. மார்க்ஸின் கனவுகளை அவரின் தலைமை மாணவரான லெனின் நனவாக்கினார். வலிமையான பாட்டாளிவர்க்க அரசை அவர் நிறுவினார். 1924 ம் ஆண்டு ஜனவரி 21 நாள் அன்று மரணத்தை தழுவினார். அன்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் தலைவனை பறிகொடுத்த சோகத்தில் மூழ்கினர்.
லெனின் உருவாக்கி வளர்த்த மார்க்சிய -லெனினச கோட்பாடுகள் நமக்கு இன்றும், என்றும் வழிகாட்டியாக திகழும் என்பது உறுதி. மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூறுவோம். 

Monday, January 20, 2014

குன்னுர் - குடந்தை, குடந்தை- குன்னுர்

நீலகிரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா
நீலகிரி மாவட்ட சங்க அலுவலக திறப்புவிழா மற்றும் சேவைக் கருத்தரங்க சிறப்புக்கூட்டம்16-01-2014 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர்.ரங்கன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக நமது சம்மேளன கொடியை தோழர். ஜெயராமன் அவர்கள் ஏற்றிவைத்தார். சங்க அலுவலகத்தை நீலகிரி மாவட்ட துணை பொதுமேலாளர் திருமதி. சந்திரிகா அவர்கள்  திறந்து வைத்தார். தலைவர்களின் படத்தை தோழர்கள். மோகன்தாஸ், சுந்தரமூர்த்தி அவர்கள் திறந்துவைத்தனர். சேவை கருத்தரங்க சிறப்பு கூட்டம் காலை 11.00 மணிக்கு மாவட்ட பொருளர்  தோழர்.ஜேவியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உதவி மாவட்ட செயலர் தோழர்.ஜெயபால்அவர்கள் அனைவரையும்  வரவேற்று பேசினார். மாநில உதவி செயலர் தோழர். ராபர்ட்ஸ் துவக்கவுரை ஆற்றினார். 

 

இவ்விழாவில்  துணை பொது மேலாளர்  திருமதி.சந்திரிகா அவர்கள், உதகை கோட்ட  பொறியாளர்  திரு. இந்திர தேவன் அவர்கள், தோழமை சங்க தோழர்கள்.சுரேந்திரன் (BSNLEU), கணேஷ் (SNEA),  வெங்கடசலபதி குரு  (AIBSNLEA), மாதவன் (AITUC), விஸ்வநாதன் (AIBSNLPWA), கென்னடி (TNTCWU) ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர். மாவட்ட செயலர் தோழர் ராமசாமி, குன்னூர் உதவி பொது மேலாளர் திரு. முத்தியால் ஆகியோர்  சேவை கருத்தரங்க உரையாற்றினர். 

சேலம் மாவட்ட செயலர் தோழர்.பாலகுமார்   மற்றும் மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் தோழர் குடந்தை விஜய்  ஆரோக்கியராஜ் ஆகியோர் சிறப்புரையுடன் மாவட்ட பொருளர் தோழர்.ஜெயராஜ் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

விழாவில் தோழமை சங்க தலைவர்கள்,   மாவட்ட சங்க கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி  தோழர்கள் என 150 க்கும் மேற்பட்ட  தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.


Friday, January 17, 2014

IDA உத்தரவு  வெளியிடு
01/01/2014 முதல் 5 சத IDA உயர்விற்கான BSNL உத்திரவு 16/01/2014 அன்று  வெளியிடப்பட்டுள்ளது.
உத்திரவு காண இங்கே சொடுக்கவும்
 

Monday, January 13, 2014

தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

Sunday, January 12, 2014


சனவரி 12 தேசிய இளைஞர் தினம் 
சுவாமி விவேகாநந்தர் 151 வது பிறந்த தினம்

இறைவனை நிதீபதியாகவோ , தண்டிப்பவராகவோ,  பணியவேண்டிய ஒருவராக 
வழிபடும் முறைகள் தாழ்ந்தவை.அவை வரவர விரிந்து உயர்ந்த முறைகளாகலாம், எனினும் அவை அன்பு என்னும் பெயருக்கு தகுதி வாய்ந்தவையல்ல.

                                    சுவாமி விவேகாநந்தர்
 

Friday, January 10, 2014

தில்லியில் (டெல்லி ) லஞ்ச புகாருக்கான ஹெல்ப் லைன்  7 மணி நேரத்தில் 4 ஆயிரம் அழைப்புகள். ஊழல் தொடர்பான புகார்களுக்கு 011-27357169


BSNL, MTNL to get Rs 11,258 crore on spectrum surrender

9/01/2014 அன்று கூடிய மத்திய அமைச்சரவை BSNL மற்றும் MTNL நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட அலைக்கற்றை கட்டணத்தை திருப்பித்தர ஒப்புதல் அளித்துள்ளது.

BSNL உரிமம் பெற்ற 6 மாநிலங்களிலும், MTNL உரிமம் பெற்ற பகுதிகளிலும் BWA அலைக்கற்றை சேவை திருப்பி ஒப்படைக்கப்படும்.

BSNLக்கு 6724.21 கோடியும் MTNLக்கு 4533.91  கோடியும் 
திருப்புத்தொகையாக (REFUND) கிடைக்கும்.
BSNL, MTNL வளர்ச்சிக்கு இத்தொகை பயன்படுத்தப்படும்.

Thursday, January 9, 2014

01.04.2014 முதல் 5 சத IDA உயர்விற்கான DPE உத்திரவு 07.01.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது உத்தரவு காண இங்கே சொடுக்கவும் BSNL  உத்தரவு விரைவில் வெளிவரும்
 GOM on revival of BSNL, MTNL meets 

BSNL மற்றும் MTNL நிறுவனங்களை சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட  நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் தலைமையிலான அமைச்சர் குழு  08/01/2014 அன்று கூடியது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.


ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (VRS) அளிப்பது.. 
அகன்ற அலைவரிசை சேவையை மேம்படுத்துவது.. 
கம்பி இல்லா அகன்ற அலைவரிசை இணைப்பு கொடுப்பது.. 
BSNLன் செல் கோபுரங்களை பிரித்து தனியாக புதிய நிறுவனம் ஆரம்பிப்பது..
BSNL மற்றும் MTNL செலுத்திய 10ஆயிரம் கோடி  அலைக்கற்றை கட்டணத்தை திருப்பித்தருவது ..  
BSNLக்கு வழங்கப்பட்ட தேசியக்கடன் தொகையை தள்ளுபடி செய்வது..
போன்ற பிரச்சினைகள் DOTயால் முன்வைக்கப்பட்டன. 
ஆயினும் முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 8, 2014

Wednesday, January 1, 2014

ஜனவரி 2014  IDA உயர்வு.
01-01-2014 முதல் IDA 5% சதவீதம் உயர்ந்துள்ளது.
மொத்தம் IDA (85.5% + 5%) 90.5% சதவீதமாக
இருக்கும்.