Tuesday, December 31, 2013


இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்
 இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.
SR. TOA தகுதித்தேர்வு 30/03/2014ல் நடைபெற உள்ளது. 
01/07/2013 அன்று 4 ஆண்டுகள் பணி முடித்த TOA தோழர்கள் பங்கு கொள்ளலாம். +2 கல்வித்தகுதி உள்ளவர்கள் நேரடியாக WALK IN GROUPல் நியமனம் பெறுவார்கள். 
+2 கல்வித்தகுதி இல்லாத தோழர்கள் தேர்வு எழுத வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 20/01/2014.

உத்தரவு நகல் காண இங்கே சொடுக்கவும்

Friday, December 27, 2013

கடலூரில்  நடைபெறவுள்ள ஒலிக்கதிர் பொன்விழா சிறப்பு மாநாட்டிற்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு அளித்து 
மிழ் மாநில நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது. 
உத்தரவு நகல் காண இங்கே சொடுக்கவும்.

Wednesday, December 25, 2013

26.12.2013
சுனாமி  9 ஆம் ஆண்டு நினைவு தினம் 
ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா
உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?

உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?
பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன் 
என்ற வைரமுத்துவின் கவிதையோடு 
 நினைவு அஞ்சலி செலுத்துவோம்.
 
வெண்மணி தியாகிகள் தினம் (1968 டிசம்பர் 25)
பலியான வெண்மணித் தியாகிகள்

1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)

 வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்! 


Sunday, December 22, 2013

  MOU with Union Bank of India 

நமது ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் கொடுப்பதற்கு காலவரையறை நீட்டித்து

 யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன்

 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது .

கடிதம் நகல் காண இங்கே சொடுக்கவும்



Friday, December 20, 2013

பொது நிறுங்களுக்கான தேர்வு வாரியம் 19.12.13 நடத்திய நேர்கானலில் CMD , BSNL பதவிக்கு திரு.ANUPAM SHRIVASTAVA,DIR (CM),BSNLஅவர்கள் தேர்வு செய்யபட்டுள்ளார் என பொது நிறுங்களுக்கான தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இவரது பதவி காலம் ஜூலை 2014 முதல் தொடங்கும்.  

Tuesday, December 17, 2013

ஒலிக்கதிர் பொன்விழா (1963 - 2013 )

06-01-2014 அன்று   கடலூர் சுப்பராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று கடலூர் மாவட்ட சங்கம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுயுள்ளது.

Friday, December 13, 2013

DoT invites Application for 1800MHz and 900MHz Spectrum Auction Starting January 23

India’s Department of Telecom invites application for 2G spectrum auction starting January 23, 2013. The DoT has issued the NIA document (Notice of Inviting Application) to start in 1800MHz and 900MHz band spectrum auction.

According to the DoT, the award of Spectrum in 1800MHz and 900MHz band shall be conducted as a single process. A common Notice has been issued only for the sake of convenience.The last date for submission of applications by interested companies is January 4.
In each service area or telecom circle, bidders will bid for blocks of spectrum of 200 KHz Paired in 1800 MHZ and 1 MHz Paired in 900 MHZ Band (i.e. the right to use spectrum blocks not linked to any frequency) as per their respective permissible limit dependingupon their categorization as a “New Entrant” or as an “Existing Licensee”.

In the auction, since the maximum number of blocks a bidder can bid is restricted on the basis of the applicable bidding caps in a Service Area, it is not possible for a bidder to win more than the same in that Service Area.

Block size shall be of 200 KHz (Paired) in 1800 MHz Band and 1 MHz (Paired) in 900 MHz Band. Minmum number of blocks to be bid shall be 25 in 1800 MHZ band for new entrant while existing licensee shall bid for minimum of 3 blocks in 1800 MHz band. Each Bidder is required to bid a minimum of 5 Blocks in 900 MHz Band

Department of Telecom (DoT) will hold a pre-auction bid conference on December 20, 2013 and last date for companies / operators to seek clarifications on rules stated in ‘Notice Inviting Application’ is December 28, NIA said.

As per the NIA, DoT had sought 60 days time to start auction from the date cabinet (Govt of India) decides on the spectrum base price and the NIA was to be issued after 15 days of the decision. The DoT has, however, issued NIA within 3 days of Govt of India putting its stamp on minimum price for two sets of 2G spectrum – 1800 Mhz band and 900 Mhz.

According to NIA, there shall be a moratorium of 2 years for payment of balance amount of one time charges for the spectrum, which shall be recovered in 10 equal annual installments. Successful bidder/operator will have to pay first installment of the balance amount on the third anniversary of the first payment and subsequent installment will have to be on the same date of each following year.
According to DoT, there are no restrictions on the technology (2G, 3G or 4G) to be adopted for providing services within the scope of the service license using spectrum blocks allotted through this auction.
However the successful bidder needs to provide details of the technology proposed to be deployed for operation of its services using spectrum blocks allotted through this auction within one month of obtaining the licence, if the technology happens to be other than GSM/CDMA/WCDMA – 3G to DoT.

Courtesy : Telecom Talk

 

Monday, December 9, 2013

இரங்கல்

நமது குடந்தை மாவட்ட உதவி  செயலாளர் தோழர். R.புண்ணியமூர்த்தி, காரைக்கால்  அவர்களின் தாயார் நேற்று (08.12.13) இரவு   காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு கிளைச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் நாளை  (10.12.13) ஓடுதுறையில்   நடைபெறும் .


Friday, December 6, 2013

டிசம்பர் -6 அண்ணல் அம்பேத்கார்  நினைவு தினம்

Tuesday, December 3, 2013

மாவட்ட செயற்குழு 
குடந்தை மாவட்ட செயற்குழு வரும் 07.12.2013 அன்று காரைகால் மார்கெட் வீதியில் உள்ள M.A.G திருமண அரங்கத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து தோழர்கள்  மற்றும் தோழியர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.   
போனஸ் குழு கூட்டம்  

செயல்திறன் அடிப்படையில் புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட போனஸ் குழு 09.12.2013 திங்கள்கிழமையன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவு காண இங்கே சொடுக்கவும்

Monday, December 2, 2013

கைபேசி மூலம் மணியார்டர் சேவை தொடக்கம் 

காரைக்கால்: காரைக்கால் துணை தபால் நிலையத்தில் செல்போன் மூலம் மணியார்டர் அனுப்பும் சேவை நேற்று முன்தினம் முதல் துவங்கியது.

காரைக்கால் அம்மையார் கோயில் பின்புறம் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் முதல் செல்போன் மூலம் மணியார்டர்(எம்.எம்.டி.எஸ்) அனுப்பும் புதிய சேவை துவங்கியது. இதன் மூலம், பணம் அனுப்ப விரும்புவோர், தபால் நிலையத்திற்குச் சென்று யாருக்குப் பணம் அனுப்ப வேண்டுமோ அவரது செல்போன் எண், அவரது பெயரைக் கூறி பணத்தை வழங்கவேண்டும். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பயனாளிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பப் படும். அந்த எஸ்.எம்.எஸ்-ல் 6 இலக்க ரகசிய எண் குறிப்பிடப்படும்.

பின்னர், அந்தப் பயனாளி தனது ஊரில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று, தனது செல்போனுக்கு வந்த 6 இலக்க ரகசிய எண்ணைக் குறிப்பிட்டு, செல்போன் எஸ்.எம்.எஸ் செய்தியைக் காட்டவேண்டும். அடுத்த சில நிமிடங்களில் அவர் பணம் பெற்றுகொள்ளலாம். இந்தப் புதிய சேவை மூலம், ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் அனுப்ப முடியும். ரூ.1000 முதல் ரூ.1500 வரை பணம் அனுப்ப கமிஷன் ரூ45, 1501 முதல் ரூ.5 ஆயிரம் வரை ரூ.79 கமிஷனும், ரூ.5001 முதல் ரூ.10,000 வரை ரூ.112 கமிஷனும் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவை நாகை ,திருவாரூர் ,வேளாங்கண்ணி என 7 தபால் நிலையத்தில் உள்ளதாக காரைக்கால் துணை தபால் நிலைய அதிகாரி தெரிவித்தார் .

Thursday, November 21, 2013

மதுரை மாநில மாநாடு கண்ட மாணிக்கம் , NFTE இளைஞர் மையத்தின் துடிப்புமிக்க தோழர் திரு. பாலகுமார் அவர்கள் சேலம் மாவட்ட செயலராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் . அவரது பணி சிறக்க காரை கிளையின் வாழ்த்துக்கள்.


Tuesday, November 19, 2013

தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்திற்கான 2014 க்குறிய விடுமுறை நாட்கள் காண இங்கே சொடுக்கவும்

Monday, October 21, 2013


Chennai cab operator pays Rs 34 lakh for fancy BSNL landline number. Read More

 மாநில செயற்குழு அறிவிப்பு  காண இங்கு சொடுக்கவும்

Saturday, October 19, 2013

BSNL Revises ISD Packs, Slashes International Tariffs by Over 75%

 India’s National telecombackbone Bharat Sanchar Nigam Ltd (BSNL) today announced the launch of revised Special Tariff Vouchers (STVs) wherein its 2G and 3G Mobile customers would get over 75% cheaper rates for making International calls to selected locations compare to normal tariff and also offers of all other Pan-India mobile service providers.

 BSNL offering STVs for ISD Calls in the range for Rs.23 to Rs.41 for prepaid 2G and 3G customers whereas postpaid 2G and 3G users have to pay a fixed monthly charge (FMC) of Rs.20 to Rs.40 to avail the cheaper rates for International calling.BSNL is the only mobile service provider in India which allow use of its all STVs for ISD calling  while National Roaming with in BSNL network area across India same as Home network.BSNL has divided the countries into four groups for various STVs. With a STV of Rs.41, prepaid GSM customers can call USA, Canada and Singapore for Rs.1.49 per minute whereas the normal rate is Rs.6 per minute without any pack or plan. BSNL mobile users can call China at Rs.1.49 per minute against the normal ISD tariff is Rs.10 per minute. Postpaid GSM customers too can avail the same rates with a FMC of Rs.40. The SMS tariff has been reduced to Rs.3 from Rs 5 per SMS.For countries including France, Germany and UK, the rate has been reduced to Rs.4.49 per minute as against Rs.6 with a STV of Rs.38 for prepaid users and FMC of Rs.35 for postpaid customers.BSNL customers can call Bangladesh, Malaysia, Hong Kong and Thailand at Rs.2.99 per minute with STV of Rs.27 as against a normal ISD call price of Rs 10. For calling Australia, the rate has been reduced to Rs 6.49 per minute with Rs.23 STV and a FMC of Rs.23 while SMS can be send for Rs.3.

18-10-2013 : President.Com.Islam Ahmed and Dy. GS(Com. CKM) met Director (HR), Sr. GM(Est), GM(PSNL) and Dy. GM(SR) and discussed the following issues and urged for their settlement. (i) Bonus (ii) Regularisation of TSMs of Chennai TD as per Court’s verdict (iii) Transfers (iv) wage erosion of employees appointed on 01-01-2007 or thereafter (v) pension and Terminal benefits Rules for BSNL D/R staff (vi) Release of officers having completed their tenures (vii) NFTE Assam circle union recognition (viii) CGA in Chennai TD.

Wednesday, October 16, 2013

Now replacement of BSNL SIM is free!!

Your Mobile phone's SIM gone faulty or lost, due to any reasons, now you need replacement and you were also feeling painful for paying SIM replacement charges.

But now the time is again to cheer up, BSNL have revisited its SIM replacement charges, which was earlier revised in November-2012. Now again based on the feedback of aggrieved customers, BSNL have decided to offer freebies of value equal to the charges for SIM replacement.

If you are getting 2G SIM in replacement of your defective or lost SIM then you have to pay Rs 100 as replacement charges and you will also get freebies in the forms of top-up of Rs 100.
For 3G USIM replacement, the SIM replacement charges are Rs 140 and you will also get free top-up of Rs 140.

2G (Normal Sim) - Free with condition of the compulsory Top up / Flexi top up / physical of Rs.100 ( incl of S.Tax) 

3G (USim) - Free with condition of the compulsory Top up / Flexi top up / physical of Rs.140 ( incl of S.Tax)

All other terms and conditions will remains same.
This scheme is effective from 15 October-2013

 Indirectly , SIM replacement is again free !!!

இஸ்லாமிய அன்பர்களுக்கு ஈகைத் திருநாளான பக்ரீத் தின வாழ்த்துகள்

 

01/10/2013 முதல் 6.6 சத IDA உயர்விற்கான BSNL உத்திரவு 15/10/2013 வெளியிடப்பட்டுள்ளது மொத்தம் 85.5.

Wednesday, October 9, 2013

DIRECTOR (HR ) உடனான சந்திப்பு

NFTE சார்பில் DIRECTOR (HR ) உடனான சந்திப்பு  08-10-2013 அன்று நடைபெற்றது .NFTE தலைவர்கள் தோழர்கள்  இஸ்லாம், சந்தேஷ்வர் சிங், ராஜமௌலி ஆகியோர் பங்கு பெற்றனர்.நிர்வாக தரப்பில் Sr.GM (HR), Sr.GM(Estt) and DGM(HR)  ஆகியோர் பங்கு பெற்றனர். கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன 

போனஸ் 

          நிர்வாக தரப்பு BSNL -இன் நிதிநிலைமையை காரணம் கூறினாலும் NFTE தரப்பில்  போனஸ் தொழிலாளர்களின் உரிமை என்றும் அது மறுக்கப்படுவது தவறு என்றும் வாதிடப்பட்டது.இதை CMD -இன் கவனத்திற்கு கொண்டு செல்வதாக Director (HR ) உறுதியளித்துள்ளார்.

Group D மற்றும் RM களின்  தேக்கநிலை 

           Sr.GM (HR), Sr.GM (Estt) and GM(EF) ஆகியோரை கொண்ட Committee ஒன்று அமைக்கப்படும் 

01-01-2007 க்கு பின் பணி அமர்த்தபட்டவர்களின் ஊதிய பிரச்சினை 

         இப்பிரச்சினையை தீர்க்க Director(Finance ) உடன் ஆலோசிக்கப்படும் என Director (HR ) உறுதியளித்துள்ளார் 

நேரடி நியமன ஊழியரின் பணி ஒய்வு  பலன் 

Officiating JTO களை  முறைபடுத்துதல் 

அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன 

TTA தேர்வு விதி மாற்றம் 

           தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு  மாற்றப்பட்ட தேர்வு விதி விரைவில் வெளியிடப்படும் 

ACR இல் Average 

அது NEPP பதவி உயர்வை பாதிக்காத வகையில் மாற்றம் கொண்டு வரப்படும் 

JTO தேர்வு முடிவுகள் 

விரைவில் வெளியிட Sr.GM (Estt ) யை அனைத்து CGM களுடன் பேசும்படி Director (HR ) அறிவுரித்தினார்

Saturday, October 5, 2013

BSNL to Launch ‘My BSNL’ App for Android & Windows Phone, Pay Bills, Recharge & Manage services from Mobile and Tablets

 In view of providing convenience to its customers, India’s National telecom backbone Bharat Sanchar Nigma Ltd (BSNL) all set to launch ‘My BSNL’ Mobile Application for Android and Windows smartphone to let its subscribers to pay bills, recharge and manage their Mobile, Land-line and Broadband services from mobile and tablets.

BSNL considers this mobile application is important to reach customers pro-actively in facilitating bill payments in Landline/Wireless (GSM/3G/CDMA/WiMAX – Post paid /Pre Paid) segments.

In the present scenario for accessing e-services offered by BSNL, it is essential to visit http://portal.bsnl.in through Desktop/ Laptop. While  ’My BSNL App’ will enable the customers to pay Postpaid bills and Prepaid Top up on-line through their Mobiles and Tablets.

BSNL’s goal with this mobile application is to provide Android /Windows Mobile/Tablet users a visually appealing, user-friendly application which facilitates a hassle free payment mechanism to either Prepaid mobile Top up /recharge, migration of new tariff plan, activation of new services or to pay Post paid bills.

Official “My BSNL App”  is free to download app and now available in Google Play Store for Android users in and Windows Phone App Store.

Thursday, October 3, 2013

AS PER RATE & COSTING SECTION OF CFA AT NEW DELHI W.E.F 1.10.2013, BSNL discount for Broadband & Wimax will be reduced from 20% to 10%, for the serving and retired Central Government/State Government/ PSU Employees 


Wednesday, October 2, 2013

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்

ரயில்வே ஊழயர்களுக்கு கடந்தாண்டை போன்று இந்த ஆண்டும் 78 நாள் சம்பளம் பண்டிகைக் கால போனஸ் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விரைவில் ஒப்புதல் பெற இருக்கின்றன.

78 நாள் சம்பளம் போனஸாக வழங்குவதால் ரெயில்வே துறைக்கு ரூ.1,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

கடும் நிதி நெருக்கடி நிலையிலும், ரயில்வே ஊழியர்களுக்கு கடந்த ஆண்டில் அளிக்கப்பட்ட அதே அளவு போனஸ் இந்த ஆண்டும் அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Productivity-linked bonus is paid to railway employees each year before the Dussehra festival. Over 12.60 lakh non-gazetted railway employees will benefit from the Cabinet decision on the bonus. The wage calculation ceiling prescribed for payment of bonus to eligible non-gazetted railway employees is Rs 3,500 per month and an employee is likely to get about Rs 8,975 as this year's bonus.

courtesy : The Economic Tmes


அக்டோபர் - 2  அண்ணல் காந்தி  பிறந்தநாள்

Tuesday, October 1, 2013

சொசைட்டி செய்திகள்

01-10-2013முதல் வட்டிவிகிதம் 16.5%இருந்து 1%குறைந்து  15.5%ஆக மாற்றப்பட்டுள்ளது 

ஈவுத்தொகை (Dividend) 12% அக்டோபர் மாத சம்பளத்தில் வழங்கப்படும்  

இன்சுரன்ஸ் ரூ 3 லட்சத்தில் இருந்து  ரூ 4 லட்சமாக உயர்த்தப்படும்

மாதந்தோறும் பிடிக்கப்படும் Thrift fund ரூ 600 லிருந்து ரூ 800 ஆக உயர்த்தப்படும்

அபராத வட்டி (Penal interest ) 5%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது 

Ordinary Loan ரூ 5 லட்சமாக உயர்த்த ஒப்புதல்  பெற டெல்லி க்கு அனுப்பப்பட்டுள்ளது 

சொசைட்டி நிலத்தில் வீடு கட்டுவதை கண்காணிக்க   அனைத்து சங்க மாநில நிர்வாகிகளை  கொண்ட குழு ஓன்று அமைக்கப்படும் 

Friday, September 27, 2013

மத்திய செயற்குழு முடிவுகள் 
 
தேசிய கூட்டாலோசணைக்குழு 4வது உறுப்பினராக ஜார்க்கண்ட் மாநிலச்செயலர்  தோழர்.மகாவீ ர் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நமது வாழ்த்துக்கள். 

கீழ்க்கண்ட கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
-:கோரிக்கைகள்:-

புதிய போனஸ் கணக்கீடு உருவாக்கப்பட வேண்டும். 
இந்த ஆண்டு குறைந்த பட்ச போனசாவது வழங்கப்பட வேண்டும்.

STAGNATION - தேக்க நிலை அகற்றப்பட வேண்டும்.

LTC மற்றும் மருத்துவப்படிகளை மறுபடியும் வழங்க வேண்டும்.

01/01/2007க்குப்பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்க வேண்டும். HRA 78.2 சத அடிப்படையிலேயே  வழங்க வேண்டும். 01/01/2007ல் இருந்து 78.2க்கான நிலுவை வழங்க வேண்டும்..

பிரதி மாதம் 12க்குள் GPF பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

கருணை அடிப்படை வேலைக்கான 55 மதிப்பெண் முறை அகற்றப்பட வேண்டும். விரைந்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.

JAO/JTO/TTA/கேடர்களில் ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் வேண்டும்.
JTO ஆக OFFICIATING  செய்யும் TTAக்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்..

மத்திய அரசு ஊழியருக்கு இணையான படிகள் 
ALLOWANCES வழங்கப்பட வேண்டும்..

TELECOM FACTORY பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

நாலுகட்ட பதவி உயர்வின் நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.
SC/ST தோழர்களுக்கான  சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 
NE-12 சம்பள விகிதத்திற்கு செல்லும் தோழர்களுக்கு 8 ஆண்டு கால சேவை நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 
அக்டோபர் 2வது வாரம் 
ஆர்ப்பாட்டம் 
பொதுச்செயலர் மற்றும் மாநிலச்செயலர்கள் பங்கு கொள்ளும் 
உண்ணாவிரதம்.

Wednesday, September 25, 2013

 25.09.2013 மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் அறிவிப்பு !ITS அதிகாரிகளின் ஊதியம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறது ! click here to read

Saturday, September 21, 2013

 தோழர் .M .முத்துராசு  TTA ,மயிலாடுதுறை அவர்கள்
விஷிஸ்ட் சேவா  விருதுபெற்றுள்ளார் தொலைத்தொடர்பு  துறையில் MAZDOOR ஆகி தன் இடைவிடாத முயற்சியால் T.M ஆகவும் TTA ஆகவும் பதவியுர்வுபெற்று வளரும் தொழிற்நுட்பத்திற்கு ஏற்ப தன்னைதயார்படுத்தி கொண்ட ஆர்வமிக்க  தோழரின் பணி  மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !


Friday, September 20, 2013

ONGC  introduced Laptop Scheme  for its Executives worth of Rs 50000 – The same facility may be extended to Non-Executive Supervisors  having one year service with the condition that they should buy the Laptop on Book Value on their retirement

From : NFTE-TN circle website

 

Thursday, September 19, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர்.

இந்த அகவிலைப்படியின் பலன் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அமைச்சரவை வரும் 20ஆம் தேதி கூடி, இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும். இந்நிலையில் அதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி 90 சதவீதமாக வழங்கப்பட உள்ளது.

இந்த ஊதிய உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 10,879 கோடி செலவாகும். கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 1-இல் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, அகவிலைப்படி தற்போதுதான் இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 17, 2013

செப் - 17 தந்தை பெரியார் பிறந்தநாள்

 

 

சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது

Friday, September 13, 2013

Family Pension to Widowed / divorced daughters - clarification : Click here.


Re-introduction of STV701 with Unlimited Local & STD BSNL Voice call facility for 30days


BSNL Tamilnadu Re-introduction of STV701 with Unlimited Local & STD BSNL Voice call facility under 2G & 3G prepaid mobile services including Chennai with effect from 11.09.2013 for only Rs.701/-(VIA SMS only Rs.622.11). The details are given below:-



MRP of STV in Rs. (incl. of S.Tax)
STV Feature
Validity
in days
SMS keyword to be sent to 53733
Amount to be deducted by IN
701
Unlimited local / Std on –net Voice Call

30 days
VOICE701
622.11

The above STV 701 is placed in Group II and is applicable as long as the customer is in Home LSA only & while in roaming, necessary charges as per the plan will be charged.


The above STV 701 is available for all plans (current + old).

All other terms and conditions will remain same.  

 

 

Sunday, September 8, 2013

 தோழர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்

Friday, September 6, 2013

பெண்கள்  பணியிட  நிலைமைகள்  குறித்த  நாடாளுமன்ற  கமிட்டியின்  அறிக்கை  /  பரிந்துரைகள்  - மாநிலச்செயலரின்  சுற்றறிக்கை

 

  Read more in English click Here  

 

தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும்

Thursday, September 5, 2013

MTNL Mumbai Launches 8Mbps Unlimited BB Plans (with FUP), Starting Rs.990

Mumbai’s number one Broadband and telecom service provider Mahanagar Telephone Nigam Ltd (MTNL) today announced the launch four new 8 Mbps High-Speed Broadband plans starting from Rs.990 over its existing ADSL Broadband services (Tri-Band).While the other 8Mbps Unlimited Broadband plan are –  Rs.1290, Rs.1690 and Rs.2290 offering the same speed of 8 Mbps download / 2  Mbps upload speed upto 50 GB, 85 GB and 165 GB respectively and after that speed will be downgraded to 512 Kbps for further unlimited data usage.
All plans are available as Combo and Non-combo. The combo version of above plans will offer a Rent FREE Landline. However in Non combo version customer will have to choose/select separate landline plan as per his own requirements.
MTNL 8Mbps Broadband Plans for Mumbai
 Note :
  • These 8Mbps plans over existing ADSL lines can be given Using normal ADSL CPE upto 1 KM distance and beyond 1 KM of respective area exchange that line bonding CPE can be used (to offer the same speed) and whcih comes at One Time Line bonding CPE Upfront Charges of Rs.4000.
  • DSL activation and testing charges, one time upfront CPE charges and monthly CPE service charges will be as per existing tariff for connection to be given on single pair using normal ADSL CPE(wired/wireless).
  • Service tax extra as applicable.
  • One static IP given free of cost for DSL_8Mbps_2290 plan on customer request.
  • Data Usage include upload and download wherever mentioned.
  • For more details dial 1500 or 022-22221500 or visit MTNL CSC.


Friday, August 30, 2013

குடந்தை மாவட்ட லோக்கல்  கவுன்சில் உறுப்பினர்கள்:-

  
1. C. கணேசன் , TM குடந்தை  - 94861 08630
2. M.விஜய் ஆரோக்யராஜ் .,SS(O) குடந்தை  -    94439 36300
3. R.சண்முகவேல் TTA மயிலாடுதுறை   -94861 02283
4. S.இருதய சௌரிராஜ் TTA  காரைக்கால்- 94861 02151
5. Mகணேசன் TS(O) நாகப்பட்டிணம் - 9443678910

அனைத்து தோழர்கள் பணி சிறக்க NFTE காரைக்கால் கிளையின் 
வாழ்த்துக்கள்.

Sunday, August 25, 2013

தொலைபேசி பராமரிப்பதற்கு மூலப்பொருட்களின் திருத்தியமைக்கப்பட்ட நெறிகள் இங்கே சொடுக்கவும்

Friday, August 23, 2013

நமது முன்னாள் சம்மேளனச் செயலர் அஞ்சாநெஞ்சன்  ஆர்.கே சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார்


Thursday, August 22, 2013

1.ஒலிக்கதிர் பொன்விழா கலந்தாய்வு கூட்டம்

 21-8-2013 காலை 10.30 மணிக்கு  தோழர் தமிழ்மணி தலைமையில் ஒலிக்கதிர் பொன்விழா கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது.தோழர் கணேசன் குடந்தை மாவட்ட செயலர் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் பங்கேற்ற பொன்விழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும்  தோழர்கள் பாண்டி காமராஜ், கடலூர் ஸ்ரீதரன், கோவை ராபர்ட் ,குன்னூர் ராமசாமி, சிவில் ஆறுமுகம், CGM அலுவலகம் மனோஜ், வேலூர் சென்னகேசவன், மதுரை லட்சம், விஜயரெங்கன், சேலம் பாலகுமாரன் ,வெங்கட், கஜேந்திரன் ,குடந்தை விஜய் ஆரோக்யராஜ்,மற்றும் தோழியர் லைலாபானு,திருநெல்வேலி   சங்கர் ,தஞ்சை நடராஜன் ஆகியோர்கள்  பொன்விழா சிறப்பாக நடத்திட  தங்களது கருத்தை பதிவு செய்தனர் . 50 வது பொன்விழாவை நவம்பர் மாதத்தில் கடலூர் SSA சிதம்பரத்தில் சிறப்பாய் நடத்திட முடிவு செய்யப்பட்டது.இறுதியாக தோழர் R K ,குடந்தை ஜெயபால், மற்றும் மாநிலச்செயலர் பட்டாபி ஆகியோர் நிறைவு செய்து பேசினார். தோழர் R K ரூபாய் 1000/ கொடுத்து பொன்விழா வசூலை தொடக்கி வைத்தார் .

 2.குடந்தை சங்க அலுவலகம் திறப்புவிழா 

 தோழர் T .P ஜோதி மாவட்ட தலைவர் தலைமையில் 
மாலை சங்கக்கொடி  ஏற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது .சங்கஅலுவலகத்தை தோழர் R K திறந்து வைத்தார், தலைவர்கள் திருஉருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. மூத்த தோழர்கள் இசக்கி ,தனபால்,குடந்தை மாலி, V S ,அதிகாரிகள்,மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .
மாநிலச்செயலர் பட்டாபி சங்க பலகையை திறந்து வைத்தார் .TEPU சங்கம்,BSNLEU பரிசு பொருள் கொடுத்து கௌரவித்தனர். 
தோழர் கலியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கூட்டத்தில் தோழர் பட்டாபி,RK ,தமிழ்மணி, ஜெயபால் உற்சாகமாக உரை நிகழ்த்தினர் . கலந்து கொண்டோர் அனைவரும் உற்சாகமுடன் சென்றனர்.

Tuesday, August 20, 2013

இந்தியாவிற்கான பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI (ஐஎஸ்ஐ) உதவியுடன் ஆண்டுதோறும் இந்தியாவுக்குள் 1,600 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்று லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா திடுக்கிடும் தகவல்

செய்தி : தினமணி மேலும் படிக்க