Tuesday, February 25, 2014

JCM கூட்டாலோசனைக்குழு பயிற்சிப்பட்டறை 

தோழர்களே..
வேலூரில் 22/02/2014 அன்று JCM  உறுப்பினர்களுக்கான 
பயிற்சிப்பட்டறை உற்சாகமுடன் நடைபெற்றது. 
தோழர். லட்சம் தலைமையேற்று நடத்தினார்.
தோழர்கள்.ஆர்.கே., முத்தியாலு, தமிழ்மணி, ஆகியோர் தங்களது கடந்த கால JCM அனுபவங்களையும் வருங்காலத்தில் நாம் செல்ல வேண்டிய வழிகள் பற்றியும் சிறப்புடன் எடுத்துரைத்தனர். 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.சேது, 
அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். 
வேலூர் பொதுமேலாளர் நிர்வாகத்திற்கே உரிய வியாபார மொழியில் தனது வாழ்த்துரையை வழங்கினார். 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி JCMன் வரலாறு பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இன்றுள்ள சூழலில் ஒற்றுமையுடன் ஊழியர் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலச்செயலர். தோழர்.மகாவீர்சிங் அவர்களின் காரசாரமான உரை பட்டறையின் சிறப்பம்சங்களாக அமைந்தது.
 

Saturday, February 22, 2014

பிப்ரவரி 22: தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினம் இன்று..

தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று 16 வயதிலேயே உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு தினம் இன்று..

Monday, February 17, 2014

கடலுக்கடியில் பூம்புகார்…
பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.
பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுகள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?

உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்குமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் ஏற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?

அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறும் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். ( தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.

ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?
பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.

இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
நன்றி : தமிழ் -கருத்துக்களம்-

Friday, February 14, 2014

JCM மாநில, தலமட்டக்குழு உருவாக்கம் 
சில இடங்களில் NFTE  மற்றும் BSNLEU சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் தலமட்டக்குழு அமைப்பதில் தாமதம் உருவானது. ஏதேனும் ஒரு சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் இருந்தால் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தலமட்டக்குழுவை அமைத்துக்கொள்ளலாம் என BSNL நிர்வாகம் 13/02/2014 அன்று உத்திரவிட்டுள்ளது.  
உத்திரவு காண இங்கே சொடுக்கவும்

பாலு மகேந்திரா... 

ஒரு சகாப்தத்தின் மரணம்!

புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா இன்று வியாழக்கிழமை சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 74.

கடந்த சிறிது காலமாகவே உடல் நலம் குன்றியிருந்த பாலு மகேந்திரா, இன்று காலை சென்னையின் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, காலமானார்.

இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்த பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரா, லண்டனில் படித்து, இந்தியாவின் பூனாவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்றவர்.

படங்கள், விருதுகள்

1970களில் வெளியான மலையாளப் படமான " நெல்லு"வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.
பின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான "கோகிலா"வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.

தமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் "முள்ளும் மலரும்" படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் " அழியாத கோலங்கள்" படத்தைத் தந்தார்.

பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், 'மூடுபனி', 'மூன்றாம் பிறை' ' நீங்கள் கேட்டவை', 'ரெட்டைவால் குருவி', 'வீடு' ' மறுபடியும்' , 'சதி லீலாவதி' போன்ற படங்களைத் தந்தார்.
அவரது படமான 'மூன்றாம் பிறை' சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் 'சத்மா' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

கலைப்படங்களை நோக்கிய நேர்த்தியான படங்களை உருவாக்குபவர் என்று பெயர் பெற்றிருந்த பாலு மகேந்திராவின் பெரும்பாலான படங்கள் வணிக ரீதியிலான முயற்சியே என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அவரது திரைப்படமான 'வீடு', அவருக்கு சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

கடைசிப் படம்

'தலைமுறைகள்' என்ற சமீபத்தில் வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவரது திரைப்படம் தான் இவருடைய கடைசி திரைப்படம் ஆகும்.

இவரது மறைவிற்கு பல திரையுலக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது திரைப்பட பள்ளிக்கூடமான ‘சினிமா பட்டறை’க்கு அவரது உடல் எடுத்து செல்லப்படுகின்றது.

Wednesday, February 12, 2014

Auction for 3G Spectrum (2100 Mhz) After New Government Takes Charge : TRAI

India’s telecom regulator TRAI today said that the next 3G spectrum in 2100 Mhz band be auctioned by June 2014 and should be made available immediately after the new government takes charge.

TRAI Chairman Rahul Khullar said “you should be planning now what you are going to do in next 3-4 years from now. One is get 2100 Mhz out by June, 2014 and the moment the new government takes charge, auction it”
Mr Khullar also said that aggressive bidding in the ongoing GSM spectrum (900Mhz and 1800Mhz band) auction may be because of the reason that mobile service providers are not sure when will they have next set of spectrum available for commercial use.
The last Auction of Spectrum in 2100Mhz band for 3G service was happened in May, 2010

 

Tuesday, February 11, 2014

பிப்ரவரி 11: தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள்

பிப்ரவரி 11: ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..
தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

வீட்டில் அன்னையே எடிசனுக்கு ஆசிரியை ஆனார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பள்ளியில் படிக்க லாயக்கில்லை என துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார்.

உள்நாட்டு போர் நடந்த பொழுது சுடசுட செய்திகளை தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார் .ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக ரயில்வே மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு
பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.

ஊமைப்படங்களை பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார். பத்தாயிரம் முறை தேடியும்
பொருள் சிக்கவில்லை ,"நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன் ;பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது !என கற்றுக்கொண்டேன் என்றார்.எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார் .

அதை சாதித்த பொழுது நள்ளிரவு .மனைவியிடம் ஆர்வமாக காண்பித்த பொழுது ,"நடுராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு ;கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !" என்றார் .அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார்.

காய்கறி விற்பனை,செய்தித்தாள் விற்றல் ,பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில் வெளியேற்றம் என விரக்தியான வாழ்வில் 1,093 காப்புரிமைகளை பெற்று இருந்தார் என்பதற்கு பின் எத்தகு உழைப்பு இருக்கும் என உணர வேண்டும் . வாழ்க்கையில் வலிகள் மிகுந்திருந்த பொழுது ஓயாத உழைப்பை கொட்டிய அவர் வெற்றியை ஓயாத உழைப்பே தீர்மானிக்கிறது என அடித்து சொன்னவர் .

ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்;அமெரிக்காவில் விளக்குகள் சிலநிமிடம் அணைந்தன .ரேடியோ கரகரத்தது,"எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது !" மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாக சொன்னது ,"எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது !".அவரின் அம்மா எனும் ஆசிரியரால் வார்க்கப்பட்ட அந்த வெளிச்ச நாயகன் போராட்ட இருட்டில் மூழ்கி இருக்கும் எல்லாருக்கும் தன்னம்பிக்கை